பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் டெஸ்டை தவறவிடும் ரஷித் கான்?
தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றி பெற்றதுடன், ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (டிசம்பர் 26) முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தன் டெஸ்ட் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Trending
ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் கடைசியா 2021ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த அவர், ஆஃப்கனிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்த நிலையில் தற்சமயம் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆஃப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இது ஆஃப்கான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்து ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகைல், அப்துல் மாலிக் உள்ளிட்ட வீரர்கள் அணியில் உள்ள நிலையிலும், ரஷித் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ராம் அலிகைல், அஃப்சர் ஜசாய், ரியாஸ் ஹசன், செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹிர் ஷா, இஸ்மத் ஆலம், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான், ஜாஹிர் ஷெஹ்சாத், ரஷித் கான், யாமின் அஹ்மத்சாய், பஷீர் அஹ்மத், நவீத் சத்ரான், ஃபரீத் அஹ்மத்
Win Big, Make Your Cricket Tales Now