Advertisement

நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்!

நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் ரத்தீஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை கணித்த ரஷித் லத்தீஃப்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 01, 2025 • 04:18 PM

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.அதேசமயம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 01, 2025 • 04:18 PM

அதிலும் குறிப்பாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல் லீக் சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறி இருப்பது அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. ஏனெனில் சமீப காலங்களில் அந்த அணி ஐசிசி தொடர்களில் லீக் சுற்றுடன் வெளியேறுவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் தொடரிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Trending

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது.இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்களை கொண்டு அணியை உருவாக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீஃப் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில், ஹசன் நவாஸ், அலி ராசா, அப்துல் சமத், அகிஃப் ஜாவேத் மற்றும் முஹம்மது நஃபே ஆகியோர் வரவிருக்கும் தொடருக்கான பரிசீலனை பட்டியலில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என்றும், முகமது ஹாரிஸ், சுஃபியான் முகீம், அராஃபத் மின்ஹாஸ், இர்பான் கான் நியாசி, ஜமான் கான், முகமது வாசிம், அப்பாஸ் அப்ரிடி, ஜஹந்தத் கான், அகா சல்மான், ஒப்ரா, அகா சல்மான், ஒப்ரா ஆகியோர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பிடிப்பார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement