1-mdl.jpg)
இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் விராட் கோலியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது தான் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. கோலியின் மோசமான ஃபார்ம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகின்றன. மற்றொருபுறம் கோலிதான், தனக்கு சிறிது காலம் ஓய்வு தேவை எனக் கோரிக்கை வைத்ததாகவும் பிசிசிஐ அதிகாரி கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் தலையிட்டுள்ளார். அதில், இந்திய அணியில் இருந்து கோலியை நீக்க ஒரு தேர்வுக்குழு அதிகாரியால் கூட முடியாது. அவரை நீக்கும் அதிகாரி இன்னும் பிறக்கவில்லை. அணியில் யார் என்ன செய்தாலும், அது கோலியின் தவறாக மாற்றப்பட்டு வருகிறது.