Advertisement

அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்பலாம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 17, 2024 • 15:05 PM
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்!
அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் போட்டிக்கு திரும்புவார் - தினேஷ் கார்த்திக்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அவசர அவசரமாக அணியிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிக்கையில், “குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டிருந்தது. 

Trending


இதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில்தான் முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “இந்த டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் வந்து நேரடியாக பந்து வீசலாம். அஸ்வினுக்கு நடுவர்கள் அந்த உதவியை வழங்கியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் விதிமுறைப்படி, ஒரு வீரர் டெஸ்ட் போட்டியின் இடையே வெளியே சென்று விட்டு, மீண்டும் ஆடுகளத்துக்கு வந்தால் குறிப்பிட்ட நேரம் வரை பந்து வீச காத்திருக்க வேண்டும். ஆனால் அஸ்வினிற்கு நடுவர்கள் சில சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் போட்டியிலிருந்து பாதியில் விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement