தற்போது உலகில் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் - சௌரவ் கங்குலி!
உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு முக்கியமானவர்? என்ற கேள்விக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.
நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் மூலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்குகிறது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறது. இந்திய அணிக்கு கடைசி இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கிடைக்காமல் போயிருந்தாலும் கூட, இந்தியா அணிக்கு அதற்கு முன்னால் சிறந்த போட்டிகளும், தற்போது நல்ல ஓய்வும் கிடைத்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி செயல்படும்? இந்த உலகக் கோப்பை குறித்து தனக்கு என்ன கருத்து இருக்கிறது? என்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மனம் திறந்து ஒரு நீண்ட பேட்டி அளித்திருக்கிறார்.
Trending
இந்திய அணி மீது எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?
கங்குலி : இந்தியா மிகச் சிறந்த வலிமையான அணி. அவர்கள் நல்ல வேகத்தில் இருக்கிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்கள் இந்திய அணிக்கு சிறப்பாக இருந்திருக்கிறது. முக்கியமாக ஆசியக் கோப்பையை வென்று இருக்கிறார்கள். நான் அவர்கள் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
2013ஆம் ஆண்டு முதல் இந்திய அணி எந்த பெரிய தொடர்களையும் வெல்லவில்லை. பெரிய தொடர்களில் இந்திய அணிக்கு என்ன நடக்கிறது?
கங்குலி : அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பெரிய தொடர்களுக்கு அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு வருகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த முறை அப்படியான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் இந்திய அணியில் நீங்கள் எந்த வீரரை பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?
கங்குலி : பல நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். நான் சுப்மன் கில்லை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் இந்த வருடம் முழுவதும் அபாரமாக விளையாடியுள்ளார். பும்ராவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக எப்படி இருக்கிறார்?
கங்குலி : அவர் மிகவும் நல்ல கேப்டன். இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்று இருக்கிறார். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று இருக்கிறார். இதுவே அவரது கடைசி உலக கோப்பையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் கோப்பையை வென்று வெற்றிகரமாக முடிப்பார் என்று நம்புகிறேன்.
உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் எவ்வளவு முக்கியமானவர்?
கங்குலி : அவர் சிறந்த ஸ்பின்னர். மேலும் தற்போது உலகில் அவர்தான் சிறந்த ஆப் ஸ்பின்னர். இந்த வடிவமைப்பில் அவர் நிபுணர். அவர் இருப்பது எப்போது முக்கியம் என்று நினைக்கிறேன். அக்சர் படேல் காயத்தால் வெளியேறியிருக்கலாம். அது தற்செயலானதாக இருக்கலாம். ஆனால் இந்திய அணிக்கு அது நல்லது.
Win Big, Make Your Cricket Tales Now