
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து வரும் 2024ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக தற்போதிலிருந்தே தயாராக திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அசுர வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் உம்ரான் மாலிக் மீது அனைவருடைய கவனமும் உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவர் எப்படி பந்து வீச்சை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.