
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் சிறப்பாகவே நமது அணி செயல்பட்டு இருந்தாலும் ஐசிசி தொடர்களை கைப்பற்றாதது அவரது பதவி காலத்தில் மிக முக்கியமான குறையாக பார்க்கப்பட்டது.
அதேவேளையில் கேப்டன் விராட் கோலியும் ரவி சாஸ்திரியும் இணைந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வந்த போதிலும் அவர்களால் இணைந்து ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஒரு விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலியும், பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியும் விலகினர். அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர விரும்புவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் அண்மையில் வெளியான அறிவிப்பின்படி ஒருநாள் கிரிக்கெட்க்கும் ரோஹித் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.