Advertisement

43 ஓவர்களை வீசியும் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்த அஸ்வின்!

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 40 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 12, 2021 • 22:58 PM
Ravichandran Ashwin Bowls 43 Overs For Surrey, Picks Just One Wicket In County Tie
Ravichandran Ashwin Bowls 43 Overs For Surrey, Picks Just One Wicket In County Tie (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் விதமாக இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்

Trending


சர்ரே அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். காயமடைந்த நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக அஸ்வின் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளார். இந்த ஆட்டம் முடிந்தபிறகு இந்திய அணியினருடனான பயிற்சியில் அஸ்வின் இணையவுள்ளார்.

முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார். அதில் 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்த இச்சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement