
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்கல் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபார அரைசதத்தை அபார வெற்றியை பதிவு செய்தது.
மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அதன் பிறகு கிட்டத்தட்ட 21 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.