
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னேவின் சாதனையை சமன் செய்யவுள்ள அஸ்வின்! (Image Source: Google)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 9.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டதுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சிறப்பான சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ள அவர், இத்தொடரிலும் சர்வதேச டெஸ்ட்டில் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.
750 சர்வதேச விக்கெட்டுகள்