
ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் களத்தில் எப்படி பரபரப்பாக இயங்கக்கூடியவரோ அதே போல் அவர் தனக்கு வெளியில் இருக்கும் எல்லா விஷயங்களிலும் அப்டேட் ஆக இருக்கக்கூடிய ஒரு நபர். அவர் தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விஷயங்களை கொண்டு வந்து ரசிகர்களுக்கு தெரியாத புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவார்.
இதோடு கிரிக்கெட் தொடர்பான டெக்னிக் விஷயங்களையும் சாமானிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புரியும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பார். தனது பந்துவீச்சில் எப்படி அவர் ஒரு விஞ்ஞானியோ, அதேபோல் கிரிக்கெட் தொடர்பாக உலகமெங்கும் நடக்கும் விஷயங்களை தேடிக் கொண்டு வந்து தருவதிலும்தான்.
ஐபிஎல் 16ஆவது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதுகுறித்தான உரையாடல்கள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த 11 வீரர்களுடன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.