
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ளன. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்ஸர் படேலுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக் கோப்பை தொடரை சிறப்பாக விளையாடுவது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கலாம். அதனால், இந்த உலகக் கோப்பைத் தொடரை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவேன். ஆச்சர்யமாக இருக்கிறது.