
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளை இரண்டு அணிகளும் வென்றுள்ளதால் மூன்றாவது போட்டிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் அடைந்த தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல முன்னாள் வீரர்கள் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று வீரர்களை பரிசோதிக்க முதலில் பேட்டிங் எடுக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து சொதப்பினார். இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் களமிறங்கி தோற்றார்கள்.