வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்?
ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் காரணமாக அவர் டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை.
காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிசை செய்து கொண்ட அவர் அதன் பின்னர் ஓய்வில் இருந்து வந்தார். இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த தொடரிலும் ஜடேஜா இடம் பெறவில்லை.
Trending
அந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த தொடருக்கு ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயம் குணமைடைய சிறுது காலம் ஆகும் என்பதால் அவர் வங்காள்தேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அவ்வாறு அவர் வங்கதேச தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மற்றும் அக்சர் அணியில் இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் மேற்கொண்டு சேர்க்க வாய்ப்பு குறைவாக இருப்பதால் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now