
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து அம்மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் எனவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்ததார். இந்த நிலையில், அர்சிபி அணி நிர்வாகமும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பெங்களூருவில் நேற்று நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்திற்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிவுள்ளோம். கூடுதலாக, இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்களை ஆதரிப்பதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிவுள்ளது.