ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல்லை எடுப்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது - விராட் கோலி
ஐபிஎல் சீசனில் கிளென் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க வேண்டும் என்பதே ஆர்சிபியின் குறிக்கோளாக இருந்தது
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வேல். அதிரடியான ஆட்டத்திற்கு பேயர்போன மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகியா அணிகளுக்காக விளையாடி பல்வேறு போட்டிகளை வெற்றிபெறச் செய்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மீதான எதிர்பார்ப்பு பண்மடங்கு அதிகரித்துள்ளது.
Trending
இதற்கிடையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், 'இந்த ஐபிஎல் சீசனில் கிளென் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க வேண்டும் என்பதே ஆர்சிபியின் குறிக்கோளாக இருந்தது. ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடிய விதம் மற்றும் அவரது அதிரடியா ஆட்டம் ஆர்சிபியின் நடுவரிசை பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவரும் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருந்தோம். நாங்கள் எதிர்பார்தது போலவே மேக்ஸ்வெல் ஆர்சிபி அணிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்' என்று தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now