
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரஜத் படிதர் தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து அசத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணியானது 8 வெற்றி மூன்று தோல்கள் என 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதெனும் ஒன்றில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் கூட நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதன் காரணமாக அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணி தரப்பில் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.