
RCB v MI, 39th IPL Match Probable Playing XI - Kohli vs Rohit (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக நடப்பு சீசனில் இவ்விரு அணிகலும் மோதிய போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றிருந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.