
RCB's AB De Villiers Lands In Dubai Ahead Of IPL 2021 (Image Source: Google)
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்தமாத இறுதியில் துபாய் சென்றடைந்தது.
இந்நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் சென்றடைந்தார். தற்போது துபாயிலுள்ள டி வில்லியர்ஸ் 6 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு, சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.