ஆர்சிபி வெற்றி பேரணி: கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு; 50க்கும் மேற்பட்டோர் காயம்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட வெற்றி பேரணியின் போது கூட்டநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக கோப்பையையும் வென்று சாதித்துள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியானது திறந்தவெளி பேருந்தில் விதான சௌதாவிலிருந்து எம் சின்னசாமி மைதானம் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் இறுதி நேரத்தில் இந்த பேரணியானது நிறுத்தப்பட்டு, சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவிற்காக ரசிகர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் பெங்களூரு மைதானம் சுற்றி அனைத்து பகுதிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதுடன், சிலர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழையவும் முயற்சி செய்தனர். இதனையடுத்து காவலர்கள் தடியடி நட்ததி ரசிகர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகிவுள்ளது.
மேலும் கூட்ட நேரிசலில் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்கள் பவுரிங் மருத்துவமனையிலும், நான்கு பேரின் உடல்கள் வைதேஹி மருத்துவமனையிலும் உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆறு பேர் வைதேஹி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று பேருக்கு தீவிர சிகிக்கை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு வாயில்கள் வழியாக அவசரமாக மைதானத்திற்குள் நுழைய முயன்றபோது நெரிசல் ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிதாகவும், இருப்பினும் சாலைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையிலும், சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் பாராட்டு விழாவானது நடைபெற்றது. இதையடுத்து மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, உள்ளே கொண்டாட்டங்கள் ஏன் தொடர்ந்தன என்று நாடு முழுவதிலுமிருந்து கேள்விகளும், விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now