‘தோனி ஒரு மாஸ்டர்’ - சைமன் கேடிச் புகழாரம்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு மாஸ்டர். அவர் வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் தெரிவி்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியுடன், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியுடன் இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை வான்ஹடே மைதானத்தில் மோதுகிறது.
வலிமையான இரு அணிகள் மோதுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் முன்பே, சமூக வலைத்தளத்தில் இரு அணிகளின் ரசிகர்களும் சூடான விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Trending
இரு அணிகளிலும் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என சமபலத்துடன் இருப்பதால், இப்போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலி்ல் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் ட்விட்டரில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி குறித்து கணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்காணொலியில் “ தோனி ஒரு மாஸ்டர். அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளுடன் பயணித்து வருகின்றனர். அருமையான வீரர்கள் அணியில் உள்ளதால், சிஎஸ்கே அணி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது.
Game Day: RCB v CSK Preview
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 25, 2021
Top of the table clash! The Southern Derby promised to be a mouth-watering contest. Here’s a sneak peek into RCB’s preparation leading into the game.#PlayBold #WeAreChallengers #IPL2021 #CSKvRCB pic.twitter.com/2WKvSOnVXy
இன்று நடக்கும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மும்பையில் ஏற்கெனவே பல நல்ல ஆட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். எந்த அணியையும் சிதைக்கும் வலிமையான பேட்டிங் வரிசை சிஎஸ்கே அணியிடம் இருக்கிறது.அதேநேரம் எங்கள் பந்துவீச்சும் இந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
தோனி குறித்து ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச் பேசி வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now