Advertisement
Advertisement
Advertisement

 விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!

ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார்.

Advertisement
 விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
 விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 13, 2024 • 09:32 PM

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09ஆம் தேதி நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் இருந்தன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 13, 2024 • 09:32 PM

அதன்படி செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. 

Trending

இதையடுத்து எஞ்சியிருந்த மூன்று நாள் ஆட்டங்களும் நடைபெறும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இப்போட்டியின் மூன்றாம் நாள், நான்காம் நாள் ஆட்டங்களும் அடுத்தடுத்து தொடர் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்றைய தினம் இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டமும் தொடர் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவு எட்டப்படமல் முழுவதுமாக கைவிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இப்போட்டிக்காக நாங்கள்  எங்களை தயார்படுத்திக் கொண்டோம், நாங்கள் நன்றாகப் பயிற்சி செய்தோம். அதனால் தான் இப்போட்டியில் நடைபெறாமல் கைவிடப்பட்டது உண்மையில் ஏமாற்றமளிக்கிறது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டியை விளையாட முயற்சிப்பது எப்போதுமே தந்திரமானது. தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றமடைந்தேன், நாங்கள் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடுவதை எண்ணியும் அந்த சவாலை எதிர்கொள்ளவும் மிகவும் உற்சாகமாக இருந்தோம். மேலும் இப்போட்டியில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்கள் ஆர்வமுடம் இருந்தனர். அதன் காரணமாகவே விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement