
Regis Chakabva Will Lead Zimbabwe Against India In ODI Series (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வருகிற 18ஆம் தேதி ஹராரேவில் நடக்கிறது.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. துணை கேப்டன் லோகேஷ் ராகுல் காயம் மற்றும் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இதற்கிடையே லோகேஷ் ராகுல் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்றதால் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷிகர் தவான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.