மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா தனது 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிர்கொண்டது.
அதன்படி செயிண்ட ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீச தீர்மானித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
Trending
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா 2 விக்கெட்டுகளைப் பெற்று புள்ளிப்பட்டியளின் முதலிரு இடங்களில் உள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் டார் ஆர்டர் வீராங்கனைகள் டேனியல் வைட் முதல் பந்திலேயும், அலிஸ் கேப்ஸி 3 ரன்களிலும், சோபிய டாங்க்லி 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ரேனுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த நடாலி ஸ்கைவர் - கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹீதர் நைட் 28 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் அரைசதம் கடந்த ஸ்கைவரும் 50 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த எமி ஜோன்ஸ் 40 ரன்களிலும், அடுத்து வந்த கேத்ரின் பிரைண்ட் ரன் ஏதுமின்றியும் ரேனுக சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரேனுகா சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now