
ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது.
மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுத்துவங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் தற்போது உள்ள 8 அணிகளிலும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க இருக்கும் நான்கு வீரர்கள் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கின்றன.