IND vs WI: இந்திய அணி வீரர்களுக்கு கரோனா?
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்றைய தினம் இந்தியா வந்தடைந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் அணி ஊழியர்கள் மூவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை மேற்கொண்டு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால், இத்தொடரை பிசிசிஐ கைவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now