
ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து டெம்பா பவுமா தலைமையிலான் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது.
இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டு, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இதுநாள் வரை ஐசிசி கோப்பையை வென்றிடாத தென் ஆப்பிரிக்க அணி இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தங்களுடைய கோப்பை கனவை நனவாக்குமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றனர்.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் எந்த கட்டத்திலும் ஓவர் எதுவாக இருந்தாலும், அனைத்து பந்து வீச்சாளர்களையும் மதிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க பேட்டர்களை அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “லார்ட்ஸ் மைதானம் விளையாடுவதற்கு ஒரு கடினமான மைதானம். உலகின் பெரும்பாலான மைதானங்களை விட இங்கு நீண்ட நேரம் உங்களால் பந்தை ஸ்விங் செய்ய முடியும்.