மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இந்த இளம் வீரரை தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இளம் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் ஓவனை தேர்வு செய்யலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Trending
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய மிட்செல் மார்ஷ், அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் பிக் பேஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் இணைந்து விளையாடி அவர், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இறங்கியுள்ளது. இந்நிலையில் மிட்செல் மார்ஷுக்கு பதிலாக இளம் அதிரடி ஆல் ரவுண்டர் மிட்செல் ஓவனை தேர்வு செய்யலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “உண்மையைக் கூறவேண்டும் எனில் தேர்வாளர்கள் எந்த முடிவை எடிப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நீங்கள் நடந்து முடிந்த பிபிஎல் தொடரை பார்த்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஒரு இளம் வீரர் மிட்செல் ஓவன் என்பவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன் இறுதிப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன், அந்த அணி கோப்பையை வெல்லா காரணமாகவும் அமைந்தார்.
மேலும் அவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட என்பதால், அநேகமாக மிட்செல் மார்ஷுக்கான மாற்று வீரராக தேர்வு செய்யப்பட மிகவும் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். ஏனெனில் மிட்செல் மார்ஷ் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரராக களமிறங்கி வருகிறார். அதேபோல் மிட்செல் ஓவனும் உள்ளூர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். அதனால் மிட்செல் ஓவனை தேர்வு செய்வது சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை
- பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, லாகூர்
- பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி
- பிப்ரவரி 28 - ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான், லாகூர்
Win Big, Make Your Cricket Tales Now