
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி பரபரப்பான இரண்டு சூப்பர் ஓவர்களின் முடிவில் வெற்றி பெற்று இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது.
இதன்காரணமாக இப்போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. சூப்பர் ஓவரும் சமனில் முடியவே இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இதேபோன்று கடைசியாக எப்பொழுது நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.