
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸி சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்திற்கான அறிவிப்பில் முதலில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு அணிகளுக்கும் ரோஹித் சர்மா தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பதவி ஏற்கும் வரையில் காத்திருந்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 இந்திய அணி நேற்று இரவு திடீரென்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வருமா முகேஷ் குமார் மூவருக்கும் முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
முகேஷ் குமார் இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் வாய்ப்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் டி20 தொடரில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பினிஷிங் ரோலில் பேட்டிங்கில் வந்து மிக அபாரமாக செயல்பட்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.