Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 4000 சர்வதேச ரன்களைச் சேர்த்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 19, 2024 • 01:23 PM

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீச முடிவு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 19, 2024 • 01:23 PM

ஆனால் டாஸை இழந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. ஏனெனில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Trending

இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்த ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தார். மேற்கொண்டு இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் 100 ரன்களை எட்டியதுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களையும் கடந்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக இந்திய அணி தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், கேஎல் ராகுல் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் 25 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் தனது 4000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த இரண்டாவது விக்கெட் கீப்பர் எனும் பெருமையையும் ரிஷப் பந்து பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 17, 092 ரன்களை குவித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர்கள்

  • 17092 ரன்கள்- எம்எஸ் தோனி
  •  4014 ரன்கள்- ரிஷப் பந்த்*
  •  3132 ரன்கள்- சையத் கிர்மானி
  •  2725 ரன்கள்- ஃபரோக் எஞ்சினியர்
  •  2714 ரன்கள்- நயன் மோங்கியா
  •  2300 ரன்கள்- ராகுல் டிராவிட்
  •  1848 ரன்கள்- கிரண் மோர்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement