-mdl.jpg)
Rishabh Pant Record: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 2 கேட்சுகளை பிடித்ததன் மூலம் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பராக அதிக கேட்சுகளை பிடித்த ஆசிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனைப் பட்டியலிலும் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் காம்ரன் அக்மலின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை வீசிய நிதிஷ் குமார் ரெட்டி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஸாக் கிரௌலி ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக அந்த இருவரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் தங்களது கேட்சுகளைக் கொடுத்து விக்கெட்டுகளை இழந்திருந்தார்.