T20 WC 2024: ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை காலி செய்த ரிஷப் பந்த்!
ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அந்த அணியில் அதிகபட்சமாகவே அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 26 ரன்களையும், நஜிபுல்ல ஸத்ரான் 19 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மூன்று கேட்ச்சுகளை பிடித்ததன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
Most Catches in a Worldcup Tournament
&mdash (@Shebas_10dulkar) June 20, 2024
10 - (2024)*
9 - Adam Gilchrist (2007)
9 - Matthew Wade (2021)
9 - Jos Buttler (2022)
9 - Scott Edwards (2022)
9 - Dasun Shanaka (2022)#INDvsAFG pic.twitter.com/GUJqqy6vLu
அதன்படி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் விக்கெட் கீப்பராக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட், 2007 ஆம் ஆண்டு 9 கேட்ச்சுகளுடன் தன்வசம் வைத்திருந்தார். இந்நிலையில், நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த் 3 கேட்ச்சுகளை பிடித்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 10 கேட்ச்சுகளை பிடித்து புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now