
Rishabh Pant has won the toss and Delhi Capitals will bowl first (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதால், இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியை மயாங்க் அகர்வால் வழிநடத்துகிறார்.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார்.