
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக வலம் வருபவர் ரிஷப் பந்த். இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து டெல்லிக்கு பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளார். அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அவரது கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது.
அதான்பிறகு பந்த் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்தின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மேக்ஸ் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுஷில் நகர் தெரிவித்துள்ளார்.