1-mdl.jpg)
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக நடக்கும் போட்டிகள் ஒவ்வொன்றும் கடைசி பந்தில் முடிவை எட்டி ரசிகர்களுக்கு விருந்துபடைத்துள்ளது. இதுவரையில் ஒவ்வொரு அணியும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், இதுவரையில் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி கண்டு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நாளை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் 20ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக தற்போது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இரு அணிகளும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த ரிஷப் பந்த், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்து காரணமாக இந்த ஆண்டிற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
Rishabh Pant marks his presence during Delhi Capitals' Practice Session Ahead Of The Game Against RCB! #DelhiCapitals #RCBvDC pic.twitter.com/m1mCYBnVqg
— CRICKETNMORE (@cricketnmore) April 14, 2023