
Rishabh Pant Moves Up Three Places In ICC Test Rankings For Batsmen (Image Source: Google)
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடா்களில் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து இந்திய அணியை காப்பாற்றினாா் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்.
இதன்மூலம் இந்திய அணியின் மிடில் ஆா்டரில் தவிா்க்க முடியாத ஒரு வீரராக ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளாா். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் பந்த்.
இந்த தரவரிசையில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 5ஆம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், ரிஷப் பந்த் 6ஆம் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளார்.