ரிஷப் பந்த் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் -சவுரவ் கங்குலி!
இந்திய வீரர் ரிஷப் பந்தின் உடல்நிலை குணமடைய போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
வரும் 31ஆம் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், டோனி தலமையிலான சென்னை அணியும் மோத உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Trending
இதனிடையே, கார் விபத்தில் படுகாயமடைந்த டெல்லி அணியின் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரிஷப் பந்த் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனருமான சவுரவ் கங்குலி இன்று கூறுகையில், “ரிஷப் பந்த் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். நான் ரிஷப் பந்தை விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய அணியும் வருத்தமாக இருக்கும்.
ரிஷப் பந்த் இளம் வீரர்.அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பந்த் சிறந்த வீரர். உடல்நிலை முழுமையாக குணமடைய அவர் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now