
Rishabh Pant only Indian player to make the cut in ICC’s Test team for 2022 (Image Source: Google)
ஒவ்வொரு ஆண்டிலும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட ஆண்டின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துவருகிறது. அந்தவகையில், 2022ம் ஆண்டின் சிறந்த டி20 மற்றும் ஒருநாள் லெவனை ஏற்கனவே ஐசிசி அறிவித்துவிட்ட நிலையில், 2022இன் சிறந்த டெஸ்ட் லெவனை அறிவித்துள்ளது.
ஐசிசியின் இந்த டெஸ்ட் அணியில் இந்தியா சார்பில் ரிஷப் பந்த் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலிருந்து உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசகானே, பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோன், ஜேம்ஸ் ஆண்டர்ன் ஆகியோரும், தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடாவும், வெஸ்ட் இண்டீஸிலிருந்து கிரெய்க் பிராத்வெயிட் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.