
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது.
ஏனெனில் இஷான் கிசான் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வரும் நிலையில் ஜித்தேஷ் சர்மா இதுவரை பெரிய அளவில் அசத்தவில்லை. மறுபுறம் கார் விபத்தில் காயத்தை சந்தித்த ரிஷப் பந்த் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதால் விக்கெட் கீப்பராக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது நன்றாக குணமடைந்து வரும் அவர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது
குறிப்பாக விக்கெட் கீப்பராக விளையாடுவது மிகவும் கடினம் என்பதால் இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி பேட்ஸ்மேனாக மட்டும் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.