‘இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை’ -வைரலாகும் ரிஷப்பின் காணொளி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்துக்குப் பிறகு தனது நிலை குறித்து புதிய காணொளி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர்களில் ரிஷப் பந்தும் ஒருவர். அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.
அதன்பின், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறார். கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு வந்தார் ரிஷப் பந்த்.
Trending
Happy NO MORE CRUTCHES Day!#RP17 pic.twitter.com/mYbd8OmXQx
— Rishabh Pant (@RishabhPant17) May 5, 2023
இந்த நிலையில், ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி நடக்கும் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அந்த காணொளிக்கு இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை எனத் தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், ரிஷப் பந்த் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து வருகிறார். கொஞ்ச தூரம் வந்தவுடன் அவரது வாக்கிங் ஸ்டிக்கை அருகில் உள்ளவரிடம் தூக்கியெறிந்து வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி தானாக நடப்பதாக அந்த விடியோவில் உள்ளது. ரிஷப் பந்த் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now