அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்த ரியான் பராக் - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடான் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 ரன்களையும், இறுதியில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் கேகேஆர் அணி இன்னிங்ஸ் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் தீக்ஷனா, பராக் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அபாரமாக விளையாடிய ரியான் பராக் 6 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 95 ரன்னிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 34 ரன்னிலும், ஷிம்ரான் ஹெட்மையர் 29 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷுபம் தூபே 25 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்களை மட்டுமே எடுத்தது.
கேகேஆர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5 SIXES in an over
The Riyan Parag show! #KKRvRR pic.twitter.com/EmFWF4udaC— Pramod Boro (@PramodBoroBTR) May 4, 2025இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும் அந்த அணி கேப்டன் ரியான் பராக் தொடர்ச்சியக 6 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மிரளவைத்தார். அதன்படி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை மோயீன் அலி வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிம்ரான் ஹெட்மையர் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ரியான் பராக்கிடம் வழங்கினார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் அந்த ஓவரில் அடுத்த 5 பந்துகளையும் எதிர்கொண்ட ரியான் பராக் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசி மொத்தமாக அந்த ஓவாரில் 32 ரன்களைச் சேர்த்து அசத்தினார். பின்னர் வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரியான் பராக் ஸ்விட் ஹிட் மூலம் அந்த பந்தையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். இந்நிலையில் ரியான் பராக் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now