
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி வெலிங்டனில் நாளை இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதையொட்டி இந்திய பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில், “உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியுடன் வெளியேறியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. ஆனால் நாங்கள் தொழில்முறை வீரர்கள். தோல்வியை ஏற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு முன்னேறி செல்ல வேண்டியது அவசியமாகும். அடுத்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே திறமையான இளம் வீரர்களை கண்டறிய நமக்கு காலஅவகாசம் உள்ளது. அதற்குள் நிறைய போட்டிகளில் விளையாடுவோம். நிறைய வீரர்கள் போதுமான வாய்ப்பு பெறுவார்கள்.
2024ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கான திட்டமிடல் நியூசிலாந்து தொடரில் இருந்து தொடங்குகிறது. இது புதிய தொடக்கம். எங்களுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிறகு ஆலோசிப்போம். இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.