
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் எப்போதும் போல, இந்த சீசனுக்கு முன்பே கணிப்புகளின் சுற்று தொடங்கிவிட்டது. பல நாடுகளைச் சேர்ந்து முன்னாள் வீரர்களும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவும் தனது கணிப்பைச் வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இந்த சீசனில் 300 ரன்கள் என்ற தடையனது உடைபடும்ம் என்றும் கணித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர். "கடந்த 17 சீசன்கள், ஐபிஎல் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, விளையாட்டை இரண்டு அல்லது மூன்று நிலைகளால் உயர்த்தியுள்ளது. பரிணாமம் மிக வேகமாக இருந்ததால் சிலர் அதைத் தொடர சிரமப்படுகிறார்கள். கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட காதல் இருந்தது, ஆனால் இப்போது, அந்த காதல் மிக வேகமாகவும், அதிக உணர்ச்சிவசப்பட்டதாகவும், அதிக அட்ரினலின் சார்ந்ததாகவும் மாறிவிட்டது.