Advertisement

கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!

இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

Advertisement
Rohit Sharma becomes first captain to record 13 successive T20I wins
Rohit Sharma becomes first captain to record 13 successive T20I wins (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 08, 2022 • 10:41 AM

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று இரவு நடந்த இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. கரோனா பாதிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 08, 2022 • 10:41 AM

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.

Trending

கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பிறகு டி20 கிரிக்கெட்டில் இந்தியா எதிர்கொண்ட நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளையும் அதைத்தொடர்ந்து  இப்போது இங்கிலாந்தையும் தொடர்ச்சியாக வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அடுத்த போட்டி, நாளை (ஜூலை 9) பிர்மிங்ஹாமில் நடக்கிறது. விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2ஆவது போட்டியில் அணியுடன் இணைய உள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement