
Rohit Sharma Becomes India's Second Most Successful T20 Captain After Surpassing Virat Kohli (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ஆம் தேதி துவங்கியது. இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் பொறுப்பான விளையாட்டின் மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.