
Rohit Sharma breaks Yuvraj Singh's Indian record for most sixes in T20 World Cup (Image Source: Google)
2022 டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.