
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது வரையிலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.