
ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ் சரியான பங்களிப்பை தந்தார்கள். இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை டிம் டேவிட் வெல்ல வைத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.
வெற்றிக்குப் பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா “நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஆட்டத்திலும் நாங்கள் இலக்கை நெருங்கி வந்தே இங்கு தோற்றோம். இதனால் இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது.