
இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது.
அதன் பிறகு இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் இழக்கவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மாண்டி பனேசார், இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். கொஞ்சம் கூட அச்சமின்றி இந்திய அணி வீரர்கள் சுழற் பந்துவீச்சு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவார்கள். இந்திய அணி இந்த தொடரில் ரோஹித் சர்மா மிகவும் முக்கியமான வீரராக திகழ்வார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரோஹித் சர்மா ஒரு டான் பிராட்மண் போல் விளையாடக் கூடிய வீரர்.